News

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(புதன்கிழமை) காலை 7.00 மணிக்கு  ஆரம்பமாகிய நிலையில் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதை காணமுடிகிறது.

காலையிலேயே  மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று சமூக இடைவெளியினை பேணி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களித்து வருகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் எந்தவிதமான அச்சமும் இன்றி  கட்டுப்பாடுகளுமின்றி மக்கள் சுதந்திரமாக  வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் மாவை சேனாதிராஜா இன்று காலை வாக்களித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top