News

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஜேர்மனி எச்சரிக்கை

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி போதுமான அளவு பரிசோதிக்கப்படவில்லை என்று ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனைகளுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு ரஷ்யா என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இது முற்றிலும் பாதுகாப்பானது என்று புடின் மற்றும் பிற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் தன்னார்வ அடிப்படையில் மருத்துவ பணியாளர்களுக்கும், பின்னர் ஆசிரியர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் நாடு முழுவதும் அக்டோபர் மாதம் முதல் தடுப்பசி போட தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இறுதி சோதனைகள் முடிவடைவதற்கு முன்னர் ‘ஸ்பூட்னிக் வி’ என்று அழைக்கப்படும் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய ரஷ்யாவின் முடிவு சில நிபுணர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது.

சோதனைகள் முழுமையாக முடிவடைவதற்கு முன் பில்லியன் கணக்கானவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்குவது ஆபத்தானது என ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார், ஏனெனில், தடுப்பூசி தவறாகப் போனால் அது கொல்லக்கூடும், எனவே ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து நான் மிகவும் சந்தேகிக்கிறேன்.

தொற்றுநோய்களின் போது, சரியான ஆய்வுகள் மற்றும் சோதனைகளை மேற்கொள்வதும், தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த சோதனை முடிவுகளை பொதுவில் வெளியிடுவதும் மிக முக்கியமானது என்று ஸ்பான் கூறினார். ஆனால், ரஷ்யர்கள் தடுப்பூசி குறித்து போதுமான தகவல்களை எங்களுக்கு வழங்கவில்லை, எனவே இது போதுமான அளவு பரிசோதிக்கப்படவில்லை.

எப்படியாவது கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த முதல் நாடு என்ற வரலாற்தை இடம்பிடிப்பது முக்கியமில்லை, ஒரு பயனுள்ள, பரிசோதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் முக்கியம் என்று ஸ்பான் கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top