News

வடக்கு துருக்கியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நான்கு பேர் உயிரிழப்பு, 11 பேரைக் காணவில்லை

துருக்கியின் வடக்கு கருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 11 பேரைக் காணவில்லை என்றும் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

வழக்கத்திற்கு மாறாக அதிக மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கட்டிடங்களும் வாகனங்களும் வீதியில் இழுத்துச் செல்லும் காணொளிகள் வெளியாகியுள்ளன.

காணாமல் போனவர்களைக் கண்டறிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் உயிரிழந்தவர்களின் ஒருவர் படையினர் என்றும் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு அறிவித்துள்ளார்.

இதுவரை, 133 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்த அனர்த்தம் மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு சேதத்தை சரிசெய்ய அனைத்து அரச வளங்களையும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி தயிப் உத்தரவிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top