News

விருப்பு வாக்கு விவகாரத்தில் சர்ச்சை – யாழ்.மத்திய கல்லுாரி முன் பதற்றம்! பொலிஸார் குவிப்பு

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் நள்ளிரவு தாண்டியும் பாரிய குழப்பம் நீடித்து பதற்ற நிலை ஏற்பட்டத்தை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மீது அதிரடி படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு கிடைத்த ஆசனங்கள் மூன்றில் முதல் ஆசனத்தை சிறிதரன் வென்றிருந்தார்.

இந்நிலையில் ஏனைய இருவர் சசிகலாவா, சித்தார்த்தனா என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில் சசிகலா முன்னிலை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சித்தார்த்தனர் சுமந்திரன் இடையே போட்டி நிலவியது.

 

 

குறித்த சம்பவத்தில், யாழ். மாவட்ட நிலைவரப்படி, விருப்பு வாக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் த.சித்தார்த்தன் இரண்டாம் இடத்தில் நீடித்து வந்ததாகச் சொல்லப்பட்டிருந்தது. அத்துடன், எம்.ஏ.சுமந்திரன் ஐந்தாவது இடத்தில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், எம்.ஏ.சுமந்திரன் குறித்த இடத்திற்கு வந்ததைத்தொடர்ந்து ஏனைய சில கட்சிகளுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மானிப்பாய் தொகுதி வாக்குகளை மீள எண்ணுமாறு சுமந்திரன் தரப்பு கோரிய நிலையில் வாக்குகள் மீள எண்ணப்பட்டது.

 

 

இறுதியில் 2ம் இடத்தை சுமந்திரனும் 3ம் இடத்தை சித்தார்த்தனும் பெற்று வெற்றியடைந்ததாக முடிவு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் மோசடி இடம்பெற்றது என தெரிவித்து யாழ் மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் நின்றவர் அங்கு வந்த சுமந்திரனுக்கு எதிராக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன், முடிவை அறிவிக்காமல் தாமதப்படுத்துவதிலும், இந்த திடீர் மாற்றத்திலும் மர்மம் உள்ளதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அந்த வளாகத்தில் நின்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரமுகர்கள் சிவாஜிலிங்கம், தம்பிராசா போன்றவர்களும் இணைந்த அதிருப்தி தெரிவித்தனர்.

 

 

தேர்தல் முடிவுகளில் மாற்றம் செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அங்கிருந்தவர்கள் குரல் எழுப்பினர். இதன்போது, பொலிஸார் தலையிட்டு தம்பிராசாவை அங்கிருந்து அகற்றினர்.

இந்தசந்தர்ப்பத்தில் போத்தல் என்று வீசப்பட்தாக கூறப்படும் நிலையில் சுமந்திரனின் பாதுகாப்புக்கு வந்த அதிரடிப்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் உட்பட சிலர் காயமடைந்துள்ளனர்.

அத்தோடு வேடிக்கை பார்த்த ஊடகவியலாளர்கள் மீதும் அதிரடிப் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top