Canada

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இரு தமிழர்கள் உயிரிழப்பு

ஒன்டாரியா மாகாணத்தின் Blue Mountains  நகரில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் Oshawa மற்றும் Whitchurch-Stouffville நகரங்களை சேர்ந்த 29 வயதான இரண்டு தமிழர்களும்    சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் பயணித்த கார் வீதியை விட்டு வெளியேறி ஒரு மரத்துடன் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான தனபாலசிங்கம் கஜன் (29) கடந்த சனிக்கிழமை திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி பளை பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

24 வயதான வாகனத்தின் ஓட்டுநரான Whitchurch-Stouffville நகரை சேர்ந்த 24 வயது இளைஞன் Collingwoodடில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் தீவிரமான நிலையில் அவர் மருத்துவ உலங்குவானூர்தியில் மூலம் ரொறன்ரோ பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து நிகழந்த போது வாகனத்தில் மூன்று பேர் இருந்ததாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் வீதியை விட்டு வெளியேற என்ன காரணம் என்பது குறித்த கால்வதுறையினரின் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top