Canada

கழிவுநீர்க்குழாய் சரி செய்ய வந்த பணியாளரால் தெரியவந்த கொலைகள்!

கனேடியர் ஒருவர் தனது வீட்டு கழிவுநீர்க்குழாயில் அடைப்பு இருப்பதாக அழைத்ததன் பேரில் வந்த துப்புரவுப் பணியாளர்கள் அடைப்புக்கு காரணமான பொருளைக் கண்டு சந்தேகம் அடைந்து பொலிசாரை அழைத்தனர்.

Adam Strong (47) என்பவர் வீட்டுக்கு விரைந்த பொலிசார், அந்த பொருளைக் கண்டபோது அது மாமிசம் போல இருக்கவே, வீட்டுக்கதவைத் தட்டியுள்ளனர்.

 

 

கதவைத் திறந்த Adamஇடம், உங்கள் கழிப்பறையிலிருந்து எதை ஃப்ளஷ் செய்தீர்கள் என பொலிசார் கேட்டிருக்கிறார்கள். உடனே Adam, ஓகே, நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள், அது ஒரு உடல்தான், அவளது மீதி உடல் வேண்டுமா, அது எனது ப்ரீசரில் இருக்கிறது, எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

பொலிசார் வீட்டை சோதனையிட, வீட்டில் இரத்தக்கரையும் ப்ரீசரில் துண்டுகளாக்கப்பட்ட சில உடல் பாகங்களும் இருந்துள்ளன. அத்துடன் வீட்டில் ஒரு பட்டாக்கத்தியும் இருந்துள்ளது.

 

 

அந்த உடல் பாகங்களையும் கத்தியிலிருந்த மாமிசத் துணுக்குகளையும் சோதித்தபோது, அவற்றில் இரண்டு பெண்களின் DNAவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஒஷாவா துறைமுகத்தில் மீன்பிடிக்கும்போது மீனவர்கள் ஒரு பெண்ணின் உடல் பாகம் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். அதே பகுதியில் Adam தனது மொபைலை பயன்ப்டுத்தியதை கூகுள் தரவு உறுதி செய்தது. தடயவியல் பரிசோதனையில் அது Adam வீட்டிலுள்ள ப்ரீசரில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்களின் மிச்சம் என்பதும் தெரியவந்தது.

 

 

அத்துடன் அந்த இரு பெண்களும் போதைப்பழக்கம் உள்ளவர்கள் என்பதும், அவர்களில் ஒரு பெண் கர்ப்பிணி என்பது தெரியவந்தது. Adam, ஆதரவற்ற நிலையில் தனக்கு அறிமுகமான Rori Hache (18) மற்றும் Kandis Fitzpatrick (19) என்னும் இருவரைக் கொலை செய்தது தெரியவர, பொலிசார் அவரைக் கைது செய்தனர். Adam மீது இரண்டு பெண்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top