News

 கிரேக்கத்தில் பெண்கள் சிறார்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல்!

கிரேக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அகதிப் பெண்கள் மற்றும் சிறார்கள் மீது பொலிசார் முன்னெடுத்த கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல் மற்றும் புகைப்படங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிரேக்கத்தில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமானது சமீபத்தில் தீக்கிரையானது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறார்கள் பாதிப்புக்கு உள்ளான பகுதியில் இருந்து வெளியேற முயன்றது மட்டுமின்றி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

 

 

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போதே கிரேக்க பொலிசார், பெண்கள் மற்றும் சிறார்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் சிறார்கள் பலர் வேதனையில் துடிக்கும் காட்சிகள் புகைப்படமாக வெளியாகி பார்ப்போரை பரிதாபப்பட வைத்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுய தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட அரசின் கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மோரியா முகாமானது புலம்பெயர்ந்தோரால் தீக்கிரையாக்கப்பட்டது.

 

 

மோரியா முகாமில் சுமார் 35 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்கான நிலையிலேயே அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மட்டுமின்றி, கிரேக்க அரசாங்கமானது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த தீவில் அவசர நிலையை பிரகடனம் செய்தது.

முகாம்கள் மொத்தமாக சேதமடைந்ததால் அங்கு தங்கியிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என அனைவரும், பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் வடக்கு ஆப்பிரிக்க மக்கள், தரையிலேயே படுத்துறங்கினர்.

 

ஆனால் கிரேக்க அரசாங்கத்திடம் இருந்து எவ்வித உதவியும் கிட்டாத நிலையில், தீவை விட்டு வெளியேற அனுமதிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டுமின்றி அவர்கள் வளமான வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லவும் முடிவு செய்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top