News

கிளிநொச்சி முற்றாக முடங்கியது!

தமிழ் மக்களின் நினைவு கூறும் உரிமையை அரசு தடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் கதவடைப்பு போராட்டத்திற்கு

தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்தமைக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சியின் சேவை சந்தை மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்கள் முழுமையாக பூட்டப்பட்டிருந்தன. அரச திணைக்களங்கள் பாடசாலைகள் என்பன திறக்கப்பட்டிருந்தன. ஆனால் பாடசாலையின் மாணவர்களின் வரவு மிக மிக குறைவாக காணப்பட்டது.

வீதிகளில் பொது மக்களின் நடமாட்டமும் குறைந்திருந்தது. ஆனால் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சியின் உள்ளுர் தனியார்
பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தன. அத்தோடு இலங்கை போக்குவரத்துச் சபையின பேரூந்துகளும் சேவையில் ஈடுபட்டன.

வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top