News

கொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 11,123பேர் பாதிப்பு- 27பேர் உயிரிழப்பு!

 பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில், 11ஆயிரத்து 123பேர் பாதிக்கப்பட்டதோடு, 27பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மூன்று தினங்களுடன் ஒப்பிடுகையில் நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இதுவரை மொத்தமாக ஐந்து இலட்சத்து 38ஆயிரத்து 569பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31ஆயிரத்து 727பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை நான்கு இலட்சத்து 11ஆயிரத்து 951பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 98பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 94ஆயிரத்து 891பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top