News

சீனா ரஷ்யாவுக்குள் பரவும் பிளேக் மரணம்: எல்லைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

மங்கோலியா நாட்டில் இருந்து சீனா மற்றும் ரஷ்யாவுக்குள் பரவும் கருப்பு மரணம் என்னும் கொள்ளை நோயை தடுக்க இரு நாடுகளும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் எல்லைகளையும் தொட்டுக்கொண்டிருக்கும் சிறிய நாடு மங்கோலியா. இந்த நாட்டில் இரத்தம் மூலம் பரவும் பிளேக் என்னும் கருப்பு மரண நோய் பரவி வருகிறது.

Marmot என்னும் ஒருவகை அணில் மூலம் இந்த நோய் பரவுகிறது. அந்த அணில் மீதிருக்கும் சிறு உன்னிகள் என்னும் பூச்சிகள் மனிதனை கடிக்கும்போதும் அவை பரவும்.

சமீபத்தில் மங்கோலியாவில் இந்த வகை அணில் ஒன்றை உண்ட 38 வயது நபர் ஒருவர் சுவாச மற்றும் இதய பிரச்சினைகளால் உயிரிழந்தார்.அவர், இப்படி இந்த பிளேக் நோயால் இறந்த மூன்றாவது நபராவார்.

மங்கோலியாவில் இந்த கருப்புக் கொள்ளைநோய் பயங்கரமாக பரவிவரும் நிலையில், அருகிலுள்ள சீனாவிலும் இருவர் இந்த நோயால் உயிரிழந்துவிட்டார்கள்.  எனவே, இரு நாடுகளுக்கும் அருகிலிருக்கும் ரஷ்யா, தன் நட்டுக்குள் இந்த நோய் பரவிவிடாமல் தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் Ukok பீடபூமி பகுதியில், ஒரு கொள்ளை நோய் பரவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, Marmot வகை அணில்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இரத்தம் மூலம் பரவும் கொள்ளைநோய் உடனடியாக சிகிச்சையளிக்காவிட்டால், 24 மணி நேரங்களுக்குள் ஆளை காலி செய்துவிடும் கொடிய நோயாகும்.  4ஆம் நூற்றாண்டில், கருப்பு மரணம் என்று அழைக்கப்பட்ட இந்த கொள்ளை நோயால் 200 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top