News

பாண்டியர்களின் பழங்காலத்து நாணயங்கள் மன்னார் நானாட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 
 
பாண்டியர்களின் பழங்காலத்து நாணயங்கள்  நானாட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
மன்னார் நானாட்டான்  சந்திக்கு அருகில் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட  எண்ணிக்கையில் 1904  நாணயங்கள்  சட்டி பாணை ஓட்டுத் துண்டுகளும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த காணியின் சொந்தக்காரரால் வீடு கட்டுவதற்கான அத்திவாரம் வெட்டும் போதே இந்த நாணயங்கள்  வெளிந்துள்ளது

குறித்த விடயம் நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து உப தவிசாளர் புவனம் அவர்களால் முருங்கன்  பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியிடம் குறித்த நாணங்கள்  ஒப்படைக்கப்பட்டுள்ளது
 
இந்த நாணயங்கள்  யாவும் மன்னார் நீதிமன்றத்தின் ஊடாக தொல் பொருள் தினைக்களத்திற்கு பாரப்படுத்தவுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லயனல் தெரிவித்தார்வரலாற்று நூல்களின் படி மீன் மற்றும் வாள் சின்னங்கள் பாண்டிய மன்னர்களுடைய முடியாட்சிக்கு உரியவையாக அறிய முடிகிறது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது



 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top