News

பிரித்தானியாவில் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரங்கு?

பிரித்தானயாவில் இரண்டாவது தேசிய அளவிலான முழு ஊரங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் சூசகமாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகளை சமாளிக்க அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் அக்டோபரில் இரண்டு வார தேசிய ஊரடங்கை முன்மொழிந்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த தகவல்கள் மற்றும் இரண்டாவது தேசிய ஊரங்கிற்கான சாத்தியம் குறித்து கேட்டதற்கு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் பதிலளித்ததாவது, மக்களை பாதுகாக்க கடைசி கட்டம் முழு தேசிய ஊரங்கு என கூறினார்.

மக்களை மிகவும் கடினமான தொற்றுநோய்களில் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையானதை நாங்கள் செய்வோம். முழு ஊரங்கு குறித்த நாங்கள் ஆலோசிக்காமல் இல்லை, ஆனால் அது நாங்கள் விரும்பும் ஒன்று அல்ல, இது பாதுகாப்புக்கான கடைசி கட்டம் எனசுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top