News

முதியவர்கள், சிறார்கள் சுற்றி வளைப்பு: கிம் ஜாங் உன் கட்டளையால் பதற்றம்

வடகொரியாவில் 75 வயதுக்கு உட்பட்ட முதியவர்களும் பாடசாலை சிறார்களும் சுரங்க பணியில் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்ற கட்டளையை கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளார்.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் முன்னெடுக்கவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான நிதி திரட்டும் வகையில், 75 வயதுக்கு உட்பட்ட முதியவர்களும் உயர் நிலை பாடசாலை வரையான மாணாக்கர்களும் கட்டாய சுரங்க வேலையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதற்கட்டமாக சிஜுங் நகரில் இந்த அவசர சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்குள்ள சுரங்கத்திலேயே முதியவர்களும் பாடசாலை மாணாக்கர்களும் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.

மேலும், குறித்த சுரங்கத்தில் இருந்து பெறப்படும் பொருட்களையே வடகொரிய தலைநகரில் அமையவிருக்கும் பொது மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட உள்ளன.

அக்டோபர் 10 ஆம் திகதிக்குள் அந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் முழுமையடைய வேண்டும் என கிம் ஜாங் உன் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகொரியா மீதான சர்வதேச பொருளாதார தடைகளால் குறித்த மருத்துவமனையின் கட்டுமான பணிகளில் தோய்வு ஏற்பட்டது.

இந்த நிலையிலேயே, வடகொரிய தலைவரின் கோபத்திற்கு பயந்து, சிஜுங் நகர நிர்வாகிகள் மருத்துவமனை பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.<

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top