Canada

ரொறன்ரோவில் 4 விருந்தோம்பல் நிறுவனங்களை மூட உத்தரவு

ரொறன்ரோவில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக விருந்தோம்பலை மையப்படுத்திய நான்கு வணிக நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக நகரத்தின் பிரதான சுகாதா மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களுடன் பேசிய சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா, அதிகாரிகள் வகுத்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரை வணிகங்களை மூட உத்தரவிட்டதாக கூறினார்.

இந்த உத்தரவுக்கான காரணங்கள் ஒவ்வொரு வணிகத்திற்கும் வேறுபட்டவை என்று டி வில்லா தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோ பொது சுகாதார புலனாய்வாளர்கள் இந்த வணிகங்களுக்கிடையில் “ஒரு தொடர்பை” கண்டறிந்ததாக டி வில்லா கூறினார். இதில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பணியாற்றியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top