Canada

ஸ்கார்புரோவில் கத்தி குத்தில் ஒருவர் படு காயம்!

ஸ்கார்புரோவில் குத்தப்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இது செவ்வாய்க்கிழமை மாலை மார்க்கம் சாலை மற்றும்   Tuxedo Court பகுதியில்  ஒருவர் மீது பல முறை கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டொரொன்டோ பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் கலந்து கொண்டு பல குத்திக் காயங்களுடன் ஒருவரைக் கண்டுபிடித்தனர்.

தீவிரமான ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற  நிலையில் அவர்    trauma centre  க்கு கொண்டு செல்லப்பட்டார் என்று டொராண்டோ பாராமெடிக் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.

சுமார் 35 வயதுடைய கறுப்பினப் பெண் என வர்ணிக்கப்படும் கருப்பு முடி கொண்ட ஐந்து அடி எட்டு அங்குல உயரமுடைய ஒரு சந்தேக நபரை அவர்கள் தேடுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

தகவல் உள்ள எவரும் போலீஸைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top