இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ஏனையவர்களுக்கு இலகுவில் தொற்றக்கூடிய தன்மையை கொண்டது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதைய வைரசினை ஆராய்ந்துள்ள விசேட நிபுணர்கள் இந்த வைரஸ் மிகஅதிகளவான பரவும் தன்மை கொண்டது இந்த வைரஸ்வேகமாகவும் இலகுவாகவும் பரவக்கூடியது என தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை முறியடித்து வைரசினை உருவாக்ககூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மக்களை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைதொழிற்சாலைக்குள் வைரஸ் வேகமாக பரவியது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக பரவல் துரிதவேகத்தில் காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.