News

கணினி பிரச்சினையால் நேர்ந்த பெரும் தவறு: பிரித்தானியாவில் கணக்கில் விடுபட்ட 16,000 கொரோனா நோயாளிகள்

பிரித்தானியாவில் கணினி ஒன்றில் ஏற்பட்ட தவறால் 16,000 கொரோனா நோயாளிகள் கணக்கில் வராமல் விடுபட்டுள்ளனர். Excel spreadsheetஇல் கொரோனா நோயாளிகளின் விவரங்களை சேர்க்கும்போது, அது முழுமையாக நிரம்பிவிட்டதால், செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15,841 நோயாளிகள் குறித்த விவரங்கள் அதில் பதிவாகாமல் விடுபட்டுள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இன்னும் அதிக பிரச்சினை என்னவென்றால், 15,841பேருக்கு கொரோனா தொற்று என்றால், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் பல ஆயிரம் இருக்கலாம், அவர்களைக் குறித்த விவரமும் விடுபட்டு போயிற்று. இவ்வளவு பெரிய ஒரு தவறு நடந்துள்ளதால், இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆனால், சுகாதாரத்துறையோ பழியைத் தூக்கி Baroness Dido Harding என்னும் நிறுவனத்தின் மீது போட்டுள்ளது.

இந்த நிறுவனம்தான் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை ட்ரேஸ் செய்யும் நிறுவனம் என்பதால், அந்த நிறுவனம் தங்களுக்கு தரவுகளை அனுப்பவில்லை என்றும், அவர்கள் அனுப்பியிருந்தால் நாங்கள் அரசுக்கு தகவல் கொடுத்திருப்போம் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. இப்படி பொது சுகாதாரத்துறை, Baroness Dido Harding நிறுவனம் மீதும் அந்நிறுவனம் சுகாதாரத்துறை மீதும் பழி சொல்லிக்கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் இத தவறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இனி இதே தவறு நேராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விடுபட்ட கொரோனா நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு தகவலளிக்கும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அவசரமாக மேற்கொண்டு வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top