News

பிரான்ஸில்  நாளொன்றுக்கான பாதிப்பு உச்சத்தை தொட்டது!

பிரான்ஸ் நாட்டில் மேலும் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் 7-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மேலும் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்து 075 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் அந்நாட்டில் 298 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து சுமார் 1.09 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top