News

பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டது!

 பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றின், நாளொன்றுக்கான உச்சக்கட்ட பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரித்தானியாவில் 19ஆயிரத்து 724பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 137பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்து 54ஆயிரத்து 644பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43ஆயிரத்து 155பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள 516பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top