News

பிரித்தானியாவில் 5224 நோயாளிகளின் எலும்புகளை வைத்திருந்த புகழ் பெற்ற மருத்துவர்

பிரபலங்களுக்கு சிகிச்சையளிப்பதில் புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர், தனது மருத்துவமனையில் 5224 நோயாளிகளின் எலும்புகளை சட்ட விரோதமாக சேகரித்து வைத்திருப்பது தெரியவந்துள்ள விடயம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேக்கு இடுப்பெலும்பு மாற்று சிகிச்சை செய்து, அவரது டென்னிஸ் வாழ்வை மீட்டுக்கொடுத்தவர் எலும்பு சிகிச்சை நிபுணரான Derek McMinn.

ஆனால், வழக்கமான ஆய்வு ஒன்று அவரது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டபோது, அங்கு 20 பானைகளில் எலும்புகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவை, உத்தேசமாக 5224 நோயாளிகளுடையவை என கருதப்படுகிறது.

 

 

மேலை நாடுகளில் ஒருவரது உடல் பாகத்தை தவறாக பயன்படுத்துவதோ, அவரது அனுமதியின்றி அவரது உடல் பாகத்தை சேகரிப்பதோ குற்றம், அவர் இறந்திருந்தால் கூட! அப்படியிருக்கும் நிலையில், Derek அந்த எலும்புகளை சேகரிப்பதற்கு நோயாளிகள் அல்லது அவர்களுடைய உறவினர்களிடம் அனுமதி பெற்றாரா, அல்லது, அந்த எலும்புகளை வைத்து ஆய்வு செய்ய அரசிடம் அனுமதி பெற்றாரா என விசாரித்தபோது, அப்படி எதுவும் அனுமதி பெற்றதாக தெரியவில்லை.

அத்துடன் ஒருவரது உடல் பாகங்கள் அகற்றப்பட்டால், அவை மருத்துவக் கழிவாக கருதப்பட்டு, எரியூட்டும் இயந்திரம் ஒன்றின் உதவியால் எரிக்கப்படவேண்டும். ஆனால், குறிப்பிட்ட மருத்துவமனை ஊழியர்களே, சட்ட விரோதமாக அந்த எலும்புகளை அந்த மருத்துவரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இந்த விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் சுகாதரத்துறைச் செயலரான ஜெரமி ஹண்ட், உடனடியக இந்த விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top