Canada

ரொறன்ரோவில் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார அதிகாரிக்கு கடிதம்

ரொறன்ரோவில் அடுத்த 28 நாட்களுக்கு, லொக் டவுண் போன்ற, புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார அதிகாரி எலீன் டி வில்லா, தலைமை மருத்துவ அதிகாரி டேவிட் வில்லியமுக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.

உணவகங்களுக்குள் உணவு விநியோகத்தை நிறுத்துமாறும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வெளியே வருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேலை, கல்வி, பயிற்சி, சுகாதார கவனிப்புகள், உணவு கொள்வனவு தவிர ஏனைய, எந்த காரணங்களுக்காகவும் வெளியே வருவதை தவிர்க்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.

அனைத்து உள்ளக உடற்பயிற்சி குழு வகுப்புகளையும், விளையாட்டக்களையும் நிறுத்துமாறும், அவர் பரிந்துரைத்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top