ஜஹ்ரானும் அவரது குழுவினரும் 20 தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
2019 மார்ச் மாதம் 27ம் திகதி ஜஹ்ரானும் மேலும் ஆறுபேரும் கலந்துகொண்ட கூட்டமொன்று பாணந்துறை சரிகமுல்லையில் இடம்பெற்றது அதில் 20 தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்துவது குறித்து ஆராயப்படடது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதலில் தாக்குதலை மேற்கொள்வது பின்னர் அந்த தாக்குதலில் இருந்து தப்பியோடுபவர்களை இலக்குவைத்து இரண்டாவது தாக்குதலை மேற்கொள்வது அதன் பின்னர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை இலக்குவைத்து தாக்குவது என திட்டமிடப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

நுவரேலியாவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகமாக செல்லும் இடங்களை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொள்வது குறித்தும் ஜஹ்ரானும் அவரது குழுவினரும் ஆராய்ந்தனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்தில் முஸ்லீம்களை இலக்குவைத்த தாக்குதலுக்கும் சிரியாவில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான தாக்குதலிற்கும் பழிவாங்கும் விதத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெறவேண்டும் என ஜஹ்ரான் தெரிவித்ததாக டீஐடி அதிகாரி தெரிவித்துள்ளார்.

தாக்குதலை எங்கு மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்ட மூன்று நாட்களில் தற்கொலை குண்டுதாரிகளுக்கு தாக்குதல் குறித்து அறிவிக்கப்படும் என ஜஹ்ரான் குறிப்பிட்டுள்ளார்.