உலக அரசியல்பிரமுகர்கள் இலங்கை அரசுக்கு கண்டனம்!, யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்கின்றது …….

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்…….
உலக அரசியல்பிரமுகர்கள் இலங்கை அரசுக்கு கண்டனம், கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ் நோக்கி மாணவர்கள் படை இந்துருளிகளில் வருகை தொடரும் உலகத் தமிழ் மக்களின் அமைதிப் போராடடம்….
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டமை பேரதிர்ச்சி – சீமான் கண்டனம்!
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தது காட்டுமிராண்டித்தனம் -இயக்குனர் கௌதமன் கடும் கண்டனம்.
கமல்ஹாசன்
நினைவுச்சின்னத்தை இடித்தவர்களே நினைவிடத்தை என்ன செய்வீர்கள் என நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை குறித்த தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்கமுடியாது என தெரிவித்துள்ள அவர்சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது எனவும் பதிவிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறுமனே கட்டுமானம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ள கமலஹாசன் வரலாறு மாறாது நினைவுச்சின்னத்தை இடித்தவர்களே நினைவுகளை என்ன செய்வீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்