ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்… ஸ்பேஸ்எக்ஸ் புதிய உலக சாதனை

வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், புவி வட்டப்பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியதும், முதல்கட்டமான பூஸ்டர் தனியாக பிரிந்து பூமிக்கு திரும்பியது. அது அட்லாண்டிக் கடலில் நிறுத்தப்பட்ட மிதவையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
12 ஆயிரம் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் சாட்டிலைட் இணையசேவையை வழங்கும் ஸ்டார்லிங் திட்டத்தில் ஏற்கனவே 1015 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று மேலும் 10 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் அனுப்பி உள்ளது.
இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 2017ம் ஆண்டு 104 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. அந்த சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.