Canada

டொராண்டோவில் லொக் டவுனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் ட 10 பேர் கைது!

டொராண்டோவில்   சனிக்கிழமை லொக் டவுனை  எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ச்சியாக இரண்டாவது வார இறுதியில்,  நேத்தன் பிலிப்ஸ் சதுக்கம், யங் -டன்டாஸ் சதுக்கம் மற்றும் குயின்ஸ் பூங்காவில் லொக் டவுனை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர்.  ஆர்பாட்டகாறர் மீது டொராண்டோ பொலிசார் மாகாண அவசர உத்தரவுகளை அமல்படுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்தனர்.

 

 

கைது செய்த 10 பேரில் 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் 38 வயதான கிறிஸ்டோபர் சாக்கோசியா, தொற்றுநோய்களின் போது பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிராக பேசியுள்ளார்.

சனிக்கிழமையன்று, சகோக்கியா மீது நான்கு முறைகேடுகள் மற்றும்  தொந்தரவு செய்தமை , 57 வயதானவர் மீது  தொந்தரவு செய்ததாக  சுமத்தப்பட்டது.

 

 

இதற்கிடையில், மேலும் நான்கு பேர் மீது சமாதான அதிகாரியைத் தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 72 வயதான ஒரு நபர் மீது சமாதான அதிகாரியைத் தடுத்தது மற்றும் போலீஸைத் தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

அவசர உத்தரவுகளுக்கு இணங்க தவறியதற்காக பங்கேற்பாளர்கள் மீது ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 3 பேர் மீது நெடுஞ்சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த வாரம், டவுன்டவுனில் லொக் டவுனை எதிர்ப்பு கூட்டங்களையும் போலீசார் கலைத்தனர். மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது, மேலும் 18 பேர் அவசரநிலை மேலாண்மை மற்றும் சிவில் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்கத் தவறிவிட்டனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top