News

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை ஆதாரமற்ற கருத்துக்களை கொண்டது – இலங்கை

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செய்ல் பெச்சலெட்டின் அண்மைய அறிக்கை ஆதாரமற்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது என இலங்கை தெரிவித்துள்ளது.

ஊகம் மற்றும் ஆதாரமற்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத் தடைகளுக்கு இந்த அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைச்சட்டங்களை மீறியமைக்கு பொறுப்பானவர்களுக்கு பொருளாதாரத் தடைகள்,சொத்து முடக்கம், பயணத் தடைகள் என்பன மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பிரித்தானியாவினால் ஜெர்மனி, கனடா, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன், கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் மற்றும் ஜெர்மனி தூதர் ஹோல்கர் சீபர்ட் ஆகியோர் கடந்த வாரம் கொழும்பில் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து ஒருமித்த தீர்மானம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் விவாதித்தனர்.

இதனையடுத்து அதே ராஜதந்திரிகள் கடந்த வியாழக்கிழமை இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர். இதன்போது இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு விளக்கினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top