News

இந்த ஆண்டுக்குள்ளாவது இந்த கொடிய கொரோனா தொற்று முடிவுக்கு வருமா? உலக சுகாதார அமைப்பின் கருத்து

இந்த ஆண்டுக்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என்று நினைப்பது உண்மைக்கு ஒவ்வாத, முதிர்ச்சி அடையாத எண்ணமாகும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டங்களுக்கான இயக்குநரான Dr Michael Ryan தான் இவ்வாறு தெரிவித்துள்ளார். முடிந்தவரை கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டில் வைப்பது மட்டுமே உலகின் இப்போதைய ஒரே இலக்காக இருக்கவேண்டும் என்றார் அவர்.

அதேநேரத்தில், சமீபத்திய தடுப்பூசி கண்டுபிடிப்புகள், குறைந்தபட்சம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றையாவது குறைக்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், நாம் ஸ்மார்ட்டாக செயல்பட்டால், இந்த கொரோனாவால் ஏற்படும் மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புகளை இந்த ஆண்டு முடிவு வாக்கில் முடிவுக்கு கொண்டு வரலாம் என்றார் அவர்.

தடுப்பூசிகள், மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புகள் மீது மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தொற்று பரவல் அபாயம் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துமானால், இந்த கொரோனா கொள்ளைநோயை வேகமாக கட்டுப்படுத்தலாம் என்றார் அவர். இருந்தாலும், நாம் சாதித்துவிட்டோம் என திருப்தியடைந்துவிடும் ஒரு மன நிலைமை ஏற்பட்டுவிடவும் கூடாது, காரணம் மீண்டும் கொரோனா பரவத்தொடங்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் எச்சரிக்கிறார் Ryan.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top