News

உடல் தளர்வுற்ற நிலையிலும் 8ஆவது நாளாக பிரித்தானியாவில் தொடரும் உணவு மறுப்பு போராட்டம்

இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக் கோரி நான்கு அம்சக்கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 8ஆவது நாளாக தொடர்கின்றது.

தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள நிலையிலும் அவரது போராட்டம் தொடர்ந்து வருகிறது.

 

 

தமிழரின் நீதி வேண்டி ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றி அவரை காப்பாற்ற வேண்டும் என பிரித்தானியாவில் பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர்

பிரித்தானியா அரசிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் 8 ஆவது நாளாக உண்ணா நோன்பிருக்கும் அம்பிகைக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, பிரித்தானிய அரசின் மௌனம் கலைத்து கவனத்தை திருப்பும் நோக்கில் சற்று முன்னர் ஒன்று திரண்டுள்ள பெருந்திரளான மக்கள் அம்பிகையின் போராட்டம் நடைபெறும் இடத்தினை நோக்கி வானகப்பேரணியாக செல்லவுள்ளனர்.

 

 

அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் கூட சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top