Canada

கனடாவில் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டம்…… 

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணிலும் 04-03-2021 வியாழக்கிழமை தொடக்கம் காலவரையற்ற நீட்சியாக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் ரொறன்ரோ,  ஒட்டாவா, மொன்றியல் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.
சர்வதேசமே!
• அனைத்துலக நீதிப்பொறிமுறைக்குள் (IIIM, ICC, ICJ, Ad-hoc Tribunal) சிறிலங்கா அரசினை கொண்டுவர வேண்டுகிறோம்!
• ஈழ தமிழர்களுக்கு நிகழ்ந்தது இன அழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம்!
• ஈழ தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டுகிறோம்!
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்ற முன்றலிலும்,டண்டாஸ் சதுக்கத்திலும் (Yonge& Dundas) ,ஒட்டாவா பாராளுமன்ற முன்றலிலும்  நடைபெற இருக்கும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற உள்ளது. இப் போராட்டத்தில்  கனடியத் தமிழர்களினை அணிதிரட்டி கனடியத் தமிழர் சமூகமும் ,மாணவர் சமூகமும் முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களில் பங்கேற்க அனைவரும் அணிதிரண்டு வாரீர்!
ஒன்றுபட்ட தமிழர்களாக ஓரணியில் நிற்போம்
         மேலதிக விபரங்களிற்கு
கனடியத் தமிழர் சமூகமும் கனடியத் தமிழர் மாணவர் சமூகமும்
ரொரன்ரோ:
416-662 2326
647 783-3466
437-332 3862
ஒட்டாவா:
 647-808 7766
 647-975 0524
மொன்ட்றியல்:
  514-605 9870
  514-297 2121
[போராட்டங்கள் யாவும் கனடா கோவிட்19 சுகாதார விதிகளுக்கு அமைய நடைபெறும்]

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top