Canada

கோவிட்-19 தொற்றுநோயின் நிதிச் செலவுகளுக்கான ஒன்ராறியோ அரசாங்கம் 150 மில்லியன் டொலர்களை மேலதிக நிதியத்தினூடாக வழங்குகின்றது.

 

 

கோவிட்-19 தொற்றுநோயின் நிதிச் செலவுகளுக்கான தீர்வுக்கென நகராட்சி போக்குவரத்துத் துறைகளுக்கு உதவ ஒன்ராறியோ அரசாங்கம் 150 மில்லியன் டொலர்களை மேலதிக நிதியத்தினூடாக வழங்குகின்றது. இந்த நிதி, ஒன்ராறியோ அரசும் மத்திய அரசும் முன்னர் பாதுகாப்பான மீள்தொடக்க ஒப்பந்தத்தின் மூலம் வாக்களித்த 2 பில்லியனை விடமேலும் கூடுதலான நிதியாக உள்ளதுடன், நகராட்சிகள் முக்கியமான போக்குவரத்து சேவைகளை தொடர்ந்தும் வழங்க உதவியாக அமையும்.

மாகாண நிதியில் மேலதிகமான 150 மில்லியன் டொலர்களுடன் பார்க்கும்போது எதிர்வரும் டிசம்பர் 31, 2021 வரை நகராட்சிகளுக்கு கிடைக்கும் தொகை மொத்தம் 650 மில்லியன் டொலர்கள். அத்துடன், இந்த நிதியம் தேவையின் அடிப்படையில் டிசம்பர் 2022 வரையும் நீட்டிப்புச் செய்யப்படலாம்.

பாதுகாப்பான மீள்தொடக்க ஒப்பந்த நிதியுதவியின் ஒரு பகுதியாக, கோவிட்-19 நோய்த்தொற்றின்போதும் அதற்குப் பின்பும் உள்ளக போக்குவரத்தானது பாதுகாப்புத் தன்மை, நிலைத் தன்மை, குறைவான கட்டணம், ஒருங்கிணைந்த தன்மை போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளதா என்பதை உறுதி செய்வதை ஆராய்வதற்கு நகராட்சிகள் மாகாணத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

2021 கோடைகாலத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டம்

2021ஆம் ஆண்டு கோடைகாலத்துக்கான வேலைவாய்ப்புத் திட்ட ஆரம்பத்தினை அறிவிப்பதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் கோடைகாலத்துக்கான வேலையைத் தேடும் மாணவராகவோ அல்லது அண்மையில் படிப்பை நிறைவுசெய்து வெளியேறிய பட்டதாரியாகவோ இருந்தால், ஒன்ராறியோவில் உள்ள ஆயிரக்கணக்கான வேலைகளுக்கு நாம் உங்களைப் பணியமர்த்துவதற்கு தயாராக உள்ளோம். அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், சுற்றுச்சூழல் போன்ற 70 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளில் நாம் வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம்.

ஒன்ராறியோ முழுவதுமுள்ள 5,000 வரையான மாணவர்கள் ஒன்ராறியோ பொது சேவையுடன் கோடைகால வேலைவாய்ப்புகளைக் கண்டறிய மேற்படி கோடைகாலத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டம் உதவியாக அமையும்.

இவற்றுக்கான விண்ணப்பங்கள் பின்வரும் இணையத்தளமூடாக இப்போது ஏற்கப்படுகின்றன: Ontario.ca/SummerStudents.

 

விஜய் தணிகாசலம், மாநில சட்டமன்ற உறுப்பினர்.
ஸ்காபரோ – றூஜ் பார்க்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top