News

நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை ஆயிரகணக்கான மக்கள் வெளியேற்றம்
நியூசிலாந்தில், 8.1 ரிக்டர் அளவிலான சக்த்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கடலோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. யாரும் வீட்டில் தங்க வேண்டாம்” என்று தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (நேமா) தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை   காலை 8:28 மணிக்கு  நியூசிலாந்து கடற்கரையிலிருந்து  சுமார் 1,000 கிலோமீட்டர் (640 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூகம்பத்தை உணராவிட்டாலும் காத்திருக்க வேண்டாம். ஆபத்தான  சுனாமி  வரலாம் மக்கள் இந்த பகுதிகளை காலி செய்ய வேண்டும் என்று தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின் கிழக்கு பகுதியில், ஆக்லாந்து நகரில் இருந்து சுமார் 256 மைல்கள் தொலைவில் இன்று   அதிகாலை 2.27 மணி  கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3  அலகாக பதிவாகி உள்ளது.
“மக்கள் கடற்கரை பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும்.  போக்குவரத்து நெரிசல்களை  தவிர்ப்பதற்காக தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் அழைத்துச் செல்ல வேண்டாம் என  அவசர சேவை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரே ரோசிக்னோல் அறிவித்து உள்ளார்.
நான்காவது பெரிய பூகம்பம் இன்று காலை நியூசிலாந்தை உலுக்கியது, வட தீவின் கடற்கரையைத் தாக்கிய மிகப்பெரிய கடல் அலை எழுச்சியின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன.கெர்மடெக் தீவுகளில் நான்காவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 6.2 அளவு அளவிடப்பட்டு உள்ளூர் நேரப்படி மதியம் 12:12 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது.
 நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியைச் சுற்றி 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நியூசிலாந்து கடற்கரை பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
பசிபிக் நெருப்பு வளையம் எனப்படும் பூகம்ப அபாய பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top