பிரித்தானியாவில் 4 வது நாளாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் ஈழத்தமிழ் பெண்!

இனப்படுகொலை தடுப்பதற்கான சர்வதேச மையத்தின் ((ICPPG) தலைவர்களில் ஒருவரான அம்பிகை செல்வக்குமார், பிரித்தானியாில் சனிக்கிழமை தொடங்கிய சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாக (மார்ச் 3ம்) தொடர்கிறது.
பிப்ரவரி 27ம் திகதி 4 கோரிக்கைகளை முன்வைத்து அம்பிகை செல்வகுமார் தனது உண்ணாவிரதத்தை லண்டனின் வெஸ்ட்மினிஸ்டரில் தொடங்கினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை 46 ஆவது தீர்மானத்தில் திருத்தம் செய்ய தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானியா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி) பரிந்துரைக்க ஐ.நா.பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.நா பொதுச் சபை-யிடம் வலியுறுத்த வேண்டும்.
Ambi Selva Akka continuing her #hungerstrike unto death demanding justice from #UNHRC #ICC for #genocide by Sri Lanka on Eelam Tamils. pic.twitter.com/aaK8hD8N0J
— Sivalingam Surendraraj (@SivalingamSure6) March 2, 2021
போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை திறம்பட விசாரிக்க நடவடிக்கை எடுக்கவும்.
சிரியா மற்றும் மியான்மரில் நிறுவப்பட்டதைப் போலவே ஒரு சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை (IIIM) நிறுவ வேண்டும். IIIM, சர்வதேச குற்றங்களுக்கான ஆதராங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சேகரிக்கப்பட்டு குற்றவியல் வழக்குகளுக்கு தயாராகும். நிறுவப்படும் IIIM அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் அது கண்டிப்பான காலக்கெடுவைக் கொண்டிருக்க வேண்டும்
இலங்கையில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் மீறல்களை தொடர்ந்து கண்காணிக்கவும், இலங்கையில் OHCHR இருப்பதை உறுதி செய்யவும், OHCHR ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். இலங்கையின் வடகிழக்கு பாரம்பரிய தமிழர் தாயகம் என்றும், தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் விருப்பங்களை தீர்மானிக்க ஐ.நா. கண்காணிப்பு குழு வாக்கெடுப்பை நடத்த பரிந்துரைக்க வேண்டும் என அம்பிகை செல்வக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.