Canada

ரொறன்ரோவில் காணாமல் போன இளம்பெண் சடலமாக கண்டுபிடிப்பு!

 

கனடாவில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் தொடர்பிலான தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதம் ரொறன்ரோவில் அமண்டா கிலன் (32) என்ற பெண் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணியின் ஒரு பகுதியாக பொலிசார் கடந்த 23ஆம் திகதி ஒரு அடுக்குமாடி வீட்டுக்கு சென்றனர்.

அங்கு கெடி அலி (45) என்பவர் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொலிசாரை தாக்க முயன்ற போது பொலிசார் அவரை சுட்டதில் படுகாயமடைந்த கெடி அலி பின்னர் உயிரிழந்தார்.

இதன்பின்னரே பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள். இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன அமண்டா தான் என தற்போது தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒர்சன் யார்க் (59) என்பவரை பொலிசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top