News

அஸ்ட்ராஜெனேகா மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக் வேலை செய்யவில்லை! படு தோல்வியில் முடிந்த மருத்துவ சோதனை…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய மருந்தை சோதனை செய்ததில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் படு தோல்வி அடைந்துள்ளது.

உலகின் சிறந்த கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒன்றை கடுபிடித்த ஆங்கிலோ-ஸ்வீடிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா, சமீபத்தில் Farxiga எனும் புதிய மருந்தை கண்டுபிடித்தது.

இந்த மருந்து பிரத்தியேகமாக கொரோனாவால் பாதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து எந்த அளவிற்கு பயனளிக்கக்கூடியது என்பதை தெரிந்துக்கொண்டு பொது பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

 

Farxiga ஆய்வில், COVID-19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,250 நோயாளிகளுக்கு உலகளாவிய பரிசோதனையில் 30 நாட்களுக்கு மேலாக இந்த மருந்து வழங்கப்பட்டது.

சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் இதய செயலிழப்பு, வகை -2 நீரிழிவு நோய் அல்லது நீண்டகால சிறுநீரக நோய் போன்ற நோய்களும் இருந்தன. ஆனால் இந்த சோதனை படு தோல்வியடைந்தது. காரணம், இந்த மருந்து அதன் தேவையை சிறிதும் பூர்த்திசெய்யவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top