News

  இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; நேற்று 1,68,912 பேருக்கு தொற்று! 904 போ் பலி!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையான 24 மணிநேரங்களில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் காலப்பகுதியில் 904 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 35 இலட்சத்து 27 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது. நேற்று உயிரிழந்த 904 பேருடன் மொத்த கொரோனா மரணங்கள் 1 இலட்சத்து 70 ஆயிரத்து 179 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 75,086 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இவா்களுடன் தொற்று உறுதியாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சத்து 56 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் 12 இலட்சத்து 1,009 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியா முழுவதும் இதுவரை 10 இலட்சத்து 45 ஆயிரத்து 28 ஆயிரத்து 565 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 29 இலட்சத்து 33 ஆயிரத்து 418 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top