News

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது

 

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 11.04 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,72,48,180 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,04,26,941 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 லட்சத்து 58 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,38,63,003 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,792 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  –  3,19,89,157,          உயிரிழப்பு –     5,76,298
இந்தியா   –   1,36,86,073,               உயிரிழப்பு –     1,71,089
பிரேசில்   –    1,35,21,409,               உயிரிழப்பு –    3,55,031
பிரான்ஸ்  –  –  50,67,216,               உயிரிழப்பு –        99,135
ரஷ்யா      –    46,49,710,                  உயிரிழப்பு –     1,03,263
இங்கிலாந்து  – 43,73,343           உயிரிழப்பு     –   127,100
துருக்கி      – 39,03,573                   உயிரிழப்பு      –     34,182
இத்தாலி     – 37,79,594                  உயிரிழப்பு      –    114,612
ஸ்பெயின்   – 33,70,256               உயிரிழப்பு      –     76,525
ஜெர்மனி    – 30,21,064                 உயிரிழப்பு      –     79,110
போலந்து    – 25,86,647                 உயிரிழப்பு      –     58,481
கொலம்பியா – 25,52,937          உயிரிழப்பு      –     66,156
அர்ஜெண்டினா- 25,51,999      உயிரிழப்பு      –      57,957
மெக்சிக்கோ  – 22,80,213          உயிரிழப்பு     –  209,702
ஈரான்       – 20,93,452                      உயிரிழப்பு    –     64,764

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top