Canada

ஒன்ராறியோவில் புதிய உடனடி தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் .

ஒன்ராறியோவில் வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தி, அதிக அளவில் பரவும் விகிதங்களைக் குறைத்து சமூகங்களைப் பாதுகாப்பதற்கும், ஒன்ராறியோ COVID-19 தடுப்பூசி விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக மாகாணத்தில் உள்ள அதிக பரவல்இனம் காணபட்ட ( “HotSpot”) பகுதிகளுக்கு தடுப்பூசிககள் விநியோகிக்கபடுகிறது.

இந்த முன்முயற்சியின் மூலம்,(postal code) தபால் குறியீட்டால் அடையாளம் காணப்பட்ட 114 நோய் தோற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் வெகுஜன நோய்த்தடுப்பு கிளினிக்குகள், மொபைல் குழுக்கள் மற்றும் உடனடியாக உருவாக்கப்படும் “பாப்-அப் கிளினிக்குகள்” மூலம் தடுபூசிகள் விநியோகிக்கப்படும்.

(Posta code)அஞ்சல் குறியீட்டால் அடையாளம் காணப்பட்டபடி, அதிகளவு நோய்பரம்பல் அடையாளம் காணப்பட்ட இடங்களில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள், மொபைல் அமைப்புகள் மற்றும் இலக்கு அமைப்புகளில் உடனடியாக அமைக்கப்படும் “பாப்-அப் கிளினிக்குகள்” மூலம் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் ஆவர்.

டொராண்டோவில் தொடங்கி பீல் வரை, மாகாணம் அதிக மொபைல் தடுப்பூசி குழுக்களை உருவாக்க கூடுதல் உதவிகளை வழங்கும், எதிர்காலத்தில் பிற பொது சுகாதார பிரிவுகளில் அதிகளவுபரம்பல் இனம் காணபட்ட இடங்களாக இவை (ஹாட் ஸ்பாட்களாக) விரிவடையும்.

மொபைல் குழுக்கள் மற்றும் பாப்-அப் கிளினிக்குகள் அதிக ஆபத்துள்ள இடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் அதிகளவு பரம்பல் உள்ள இடங்களில் நம்பிக்கை சார்ந்த முக்கிய இடங்களில் தடுப்பூசிகளை வழங்கும்.

வரவிருக்கும் மொபைல் மற்றும் பாப்-அப் கிளினிக்குகள் மாகாண தடுப்பூசி பதியும்முறையை பின்பற்றாது. ஆனாலும் உள்ளூர் சுகாதரத்துறையினருக்கு போவதற்கு மக்கள் ஊக்குவிக்க படுவார்கள்.

இந்த வாரம், “பாப்-அப் கிளினிக்” நோய் தோற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு Etobicoke உள்ள (BAPS) ஸ்ரீ சுவாமிநாராயண் வளாகத்தில் செயல்படத் தொடங்கும்.

அவசர popup கிளினிக்குகளை நிறுவுவதற்கும் செயல்படுவதற்கும் அரசாங்கம் (BAPS) அறக்கட்டளைகள், வில்லியம் ஒஸ்லர் சுகாதார அமைப்பு மற்றும் டொராண்டோ பொது சுகாதார பிரிவு ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கிளினிக்கிற்கான நியமனம் முன்பதிவு வில்லியம் ஒஸ்லர் ஹெல்த் சிஸ்டம் முன்பதிவு முறை மூலம் சுற்றியுள்ள மிகவும் பாதிக்கப்பட்ட “ஹாட் ஸ்பாட்” சமூகங்களுக்கு திறக்கப்படும் மற்றும் இந்த தடுப்பூசிகள் ஏப்ரல் 14, 2021 அன்று போட தொடங்கப்படும்.

ஒன்ராறியோ பொது சுகாதார அலகுகள், வணிகக் குழுக்கள் மற்றும் பெரிய தனிபட்ட முதலாளிகளுடன் இணைந்து முதலாளியால் இயக்கப்படும் onsite தடுப்பூசி கிளினிக்குகளை ஆராய்கிறது, அதிக பரவல் உள்ள அபாயகரமான இடங்களில் இந்த கிளினிக்குகள் முதன்மைப்படுத்தபடும்.

இந்த கிளினிக்குகள் பங்கேற்கும் முதலாளிகளால் அமைக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டு, இயக்கப்படும்.

மேலும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கும் உள்ளூர் சமூகங்களின் உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

இந்த திறன் பொதுவில் நடத்தப்படும் தடுப்பூசி கிளினிக்குகளுக்கு துணைபுரியும்.

கூடுதலாக, அதிக நோய்பரவல் இடங்களுக்கு உதவுவதற்காக, ஏப்ரல் 9, 2021, ஒன்ராறியோ அரசாங்கம் மாகாண முன்பதிவு முறையை விரிவுபடுத்தியது.

50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு வெகுஜன தடுப்பூசி தளங்களில் அதிக பரவல் ( ஹாட் ஸ்பாட்) சமூகங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டது. தகுதிவாய்ந்த மக்கள், (Postal Code)அஞ்சல் குறியீட்டால் அடையாளம் காணப்பட்டவர்கள், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மாகாண முன்பதிவு முறை மூலம் அல்லது நேரடியாக தங்கள் சொந்த முன்பதிவு முறையைப் பயன்படுத்தும் பொது சுகாதார அலகுகள் மூலமாக ஒரு சந்திப்பை திட்டமிடலாம்

ஏப்ரல் 12, 2021 நிலவரப்படி, மாகாணத்தில் உள்ள சிறப்பு கல்வித் தொழிலாளர்கள் மற்றும் பீல் மற்றும் டொராண்டோ நோய் அதிக பரவல் உள்ள (ஹாட் ஸ்பாட்களில் உள்ள) கல்வித் தொழிலாளர்கள் மாகாண தடுப்பூசி முன்பதிவை 1 833 943 3900 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியம்.

தடுப்பூசிகள் எதிர்காலத்தில் வெளிவரும் York, ஒட்டாவா, ஹாமில்டன், Halton மற்றும் Durham போன்ற பிற நோய் அதிக பரவல் உள்ள இடங்களில் உள்ள கல்வித் தொழிலாளர்களுக்கு ஒன்ராறியோவின் தடுப்பூசி இரண்டாம் கட்டம் ஏப்ரல் 2021 இல் அதிக ஆபத்துள்ள சுகாதார நிலைமைகளைக் கொண்ட நபர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும்.

மத்திய அரசிடமிருந்து COVID-19 தடுப்பூசியை மாகாணம் தொடர்ந்து பெற்றால், ஒன்பது மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு ஒன்டரியோவில் ஏப்ரல் மற்றும் ஜூன் 2021 இறுதியில் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும்..

கடந்த வாரம், ஒன்ராறியோ முன்பை விட அதிக தடுப்பூசிகளை வழங்கியது. இதன் விளைவாக, குறைந்தது ஒரு டோஸைப் பெறும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது:

80+: 88%

75-79: 81%

70-74: 62%

65-69: 38%

60-64: 35% என்கின்ற விகிதத்தில் தடுபூசியை பெற்றுள்ளனர்.

ஒன்ராறியோ முழுவதும் 3.3 மில்லியனுக்கும் அதிகமான தடுபூசிகள் வளங்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவின் தடுப்பூசி வழங்கல் தொடங்கியதிலிருந்து, ஊசிகளைப் பெறுவதற்கான எங்கள் திறன் வேகமாக வளர்ந்துள்ளது.

முதல் மில்லியனை நிர்வகிக்க 81 நாட்கள் ஆனது. இரண்டாவது மில்லியனைத் தாண்ட 17 நாட்கள். நாங்கள் மூன்று மில்லியனைத் தொட 13 குறைந்த நாட்களே எடுக்கும் என்று எதிர்பார்கிறோம்.

சமீபத்திய தடுப்பூசிகளை கீழுள்ள வெப்சைட் ல் பார்வைஇடலாம்:

https://covid-19.ontario.ca/covid-19-vaccines-ontario

ஒன்ராறியோ வயது வந்தவர்களில் 40% பேர் வீட்டில் தங்கும் கட்டளை முடியம் பொழுது அனேகமாக தடுப்பூசி பெற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஒன்ராறியோ அரசாங்கம் தனது COVID-19 தடுப்பூசி வெளியீட்டில் அதன் திறனை அதிகரித்துள்ளது, மேலும் மாகாணத்தில் 700 க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த இடங்கள் 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் AstraZeneca vaccine தடுப்பூசியை வழங்கத் தொடங்கும்.

ஒன்ராறியோ நாட்டின் வேறு எந்த மாகாணத்தையும் அல்லது பிரதேசத்தையும் விட அதிகமான அளவு தடுபூசிகளை போடுகின்றது. அதே நேரத்தில் போடப்படும் அளவுகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து செல்கிறது.

93% க்கும் மேற்பட்ட நீண்டகால குடியிருப்பாளர்கள் முழுமையாக நோயெதிர்ப்பு தடுபூசிகளை பெற்றதன் மூலம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் பாதுகாக்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்.

எங்கள் தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் நோய் மற்றும் அதிகூடிய நோய்ப்பரவலுள்ள (Hot spot) பகுதிகளில் வயதானவர்களுக்கும், தீவிர ஆபத்து உள்ளவர்களுக்கும் கவனம் செலுத்தப்படும்.

 

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top