News

இலங்கையில் இன்றுமட்டும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று, 21 பேர் உயிரிழப்பு

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 275 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில், 63 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 42ஆயிரத்து 746ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 102 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 322 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 23ஆயிரத்து 483 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 12 இலட்சத்து 88 ஆயிரத்து 560 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை இரண்டு இலட்சத்து 67 ஆயிரத்து 900பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Copyright © 2015 EETTV.COM.

To Top