News

  இஸ்ரேல் மீது 130 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்திய ஹமாஸ்

 

 

 

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு நேற்று இரவு மட்டும் 130 முறை ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது  நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு இஸ்ரேல் விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த 13 மாடி கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அந்த கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பெரும் உயர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், காசா டவர் கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா டவர் கட்டிட தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் காசாவில் இருந்து 130 ராக்கெட்டுகளை இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு ஏவியது.

இந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவை இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் ஏவுகணை தடுப்பு அமைப்பால் தடுக்கப்பட்டது. ஆனால், சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற இஸ்ரேலிய நகங்களில் விழுந்தன. இந்த ஏவுகணை தாக்குதலில் பேருந்து, வாகனங்கள், கட்டிடங்கள் தீக்கிரையானது. மேலும், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. .

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top