News

லண்டனில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சென்ற இந்திய குழுவினரில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று

 

லண்டனில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சென்ற இந்திய குழுவினரில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

லண்டனில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சென்ற இந்திய குழுவினரில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், முழு குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மாநாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு அதில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு தினமும் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது.

அதில் இந்திய பிரதிநிதிகள் 2 பேருக்கு தொற்று உறுதியானதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மாநாட்டில் பங்கேற்கும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

இனிமேல் இந்திய குழுவினர் காணொலி வாயிலாக மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top