கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 526 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,361 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 233,053ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,289 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 195,434 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் மேலும் 51 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2425 ஆக உயர்ந்துள்ளது.