News

 இலங்கையில் மேலும் 2248 பேருக்கு கொரோனா பாதிப்பு, 54 பேர் உயிரிழப்பு.

 

 

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 79 பேர் உட்பட இலங்கையில் மேலும் 2248 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் (ஜூன்-19) 2,248 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களில் மேலும் 79 பேரும், புதுவருட கொத்தணியுடன் தொடர்புபட்டு 2,169 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இலங்கையில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 237,661 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து 2,134 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை, 199,393 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் தொற்று உறுதியான 35,734 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோவிட் பெருந்தொற்று காரணமாக 54 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. பதிவான 54 கோவிட் மரணங்களில் 23 பேர் பெண்கள் எனவும், 31 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

30 வயதுக்கும் குறைந்த இரண்டு மரணங்களும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 9 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்ட 43 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன்படி இலங்கையில் கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2534 ஆக உயர்வடைந்துள்ளது…

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top