Canada

கனடாவுக்கு 10 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய அமெரிக்கா

 

 

கனடாவுக்கு 10 இலட்சம் மொடர்னா கோவிட் 19 தடுப்பூசிகளை நன்கொடையாக அமெரிக்கா வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசிகள் இன்று வியாழக்கிழமை கனடாவுக்கு வந்து சேருகின்றன.

ஜோ பைடன் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட சா்வதேச நாடுகளுக்கான பெருந்தொகை தடுப்பூசி நன்கொடைத் திட்டத்தின் ஒரு பகுதியாக கனடாவுக்கு இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாடுகளுக்கு சுமார் 80 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்காவும் கனடாவும் தங்கள் குடிமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் கைகோர்த்து செயல்பட்டன. தொற்று நோயைக் கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு உதவும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியான எங்கள் நெருங்கிய கூட்டாளியும் அயல் நாடுமான கனடாவுக்கு ஒரு மில்லியன் தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top