News

சீனாவில் 28 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிகட்டிடம்

 

சீனாவின் சாங்ஷா பகுதியில் 28 மணித்தியாலம் 45 நிமிடங்களில் 10 மாடிகளைக் கொண்ட பாரிய கட்டடம் ஒன்றைக் கட்டி முடித்து பிராட் குரூப் என்ற நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

ஒரு நாளுக்கும் சற்றுக் கூடுதலாக நேரத்தில் இந்தக் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்த பிராட் குரூப் நிறுவனம் அதனை விடியோவாக யூடியூப்பிலும் பதிவிட்டுள்ளது.

சுவர்கள், ஜன்னல்கள், கதவுகளை தனித்தனியாக உருவாக்கி, அலமாரிகள், சமையல் கூடங்களையும் அதற்கான தொழிற்சாலைகளில் தயாரித்து தயாராக வைத்துக் கொண்டு இந்தக் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டது.

கட்டுமானம் முழுமையாக முடிந்ததும் அந்தக் கட்டடத்துக்கு உடனடியான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top