Canada

ரொறன்ரோவில் குழந்தையின் பிறந்த நாள் விழாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 சிறார் உட்பட நான்கு பேர் காயம்

சனிக்கிழமை இரவு ரெக்ஸ்டேலில் நடந்த ஒரு குறுநடை போடும் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் ஒரு கூட்டத்திற்குள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு இடம் பெற்றுள்ளது   இதில் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

டான்ட்ரிட்ஜ் கிரசென்ட் பகுதியில் இரவு 9 மணியளவில் ஒரு குடியிருப்பு வளாகத்தில் குழந்தையின் பிறந்தநாள் விழா இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை அங்கு வந்த சந்தேக நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் அதில்   ஒரு வயது குழந்தை, ஐந்து வயது சிறுமி, 11 வயது சிறுவன் மற்றும் 23 வயது இளைஞன் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த மருத்துவ அவசர உதவிக்குழுவினர், சம்பவம் நடந்த அந்த குடியிருப்பில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் குழந்தை ஒன்றை மீட்டுள்ளனர்.

இன்னொரு குழந்தையும் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். மேலும், ஒரு குழந்தையும் இன்னொருவரும் லேசான காயங்களுடன் தப்பியுள்ளதும் கண்டறியப்பட்டது.

மீட்கப்பட்ட  நால்வரையும் முதலுதவிக்கு பின்னர் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர்கள் மற்றும், சம்பவத்தின் பின்னணி தொடர்பில் முதற்கட்ட விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top