Crime

மகனின் மரண விசாரணையில் சந்தேகம் உடல் கூற்று பரிசோதனை செய்யும்படி நீதிமன்றில் தாய் வேண்டுகோள்!!

Eet Tv: 2021-06-10  மகனின் மரண விசாரணையில் சந்தேகம் உடல் கூற்று பரிசோதனை செய்யும்படி நீதிமன்றில் தாய் வேண்டுகோள்!!

கடந்த 3ம் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப் பட்ட நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப் பட்டு இருந்தார் .

சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன்என்று தெரிவித்திருந்தார் .

எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு’இவர்க்ளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது .

மருத்துவ உடல் கூற்று அறிக்கையில் எனக்கு சந்தேகம் உள்ளது எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும் கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ் போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றனர் உண்மை ஜெயிக்க வேண்டும்என தெரிவித்துள்ளார்

அந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி அறையில் நீதிபதி கருப்பையா ஜீவராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .

இதன் போது குறித்த வழக்கின் சாட்சிகள் சாட்சியம் அளிக்கும் நிலையில் தனது மகனின் மரணகூற்று பரிசோதனையில் சந்தேகம் இருப்பதாகவும் மீண்டும் ஒருமுறை தனது மகனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று உயிரிழந்தவரின் தாயார் நீதிபதி முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 3ம் திகதி மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர் .

இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட்டார். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாணையிடம்பெற்று வருகின்றது.

4ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 4 பக்கட்டுக்களை கொண்ட ஜஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் அது நெஞ்சுப் பகுதியில் ஜஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

அரசாங்கத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படாத சில பாராளுமன்ற உறுப்பினர்கள்இருக்கின்றனர் அவர்களுக்கு முதல் புனர்வாழ்வு அளிக்க வேண்டும்-இரா சாணக்கியன்!!

அரசாங்கத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படாத சில பாராளுமன்ற உறுப்பினர்கள்இருக்கின்றனர் அவர்களுக்கு முதல் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் தற்போது அரசாங்க கட்சியில் இருக்கின்றனர் இதில் சிலர் விடுதலைப் புலிகளில் இயங்கியவர்களும் இருக்கின்றனர் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன் நடராஜா பிரதிப்ராஜா என்கின்ற ஒரு நபர் முப்பத்தாறு வயது மதிக்கத்தக்கவர் திருமணம் முடித்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் போராட்டத்திலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஒரு அங்கத்தவர் அவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு முகநூலில் ஒரு போட்டோ பதிவு செய்யப்பட்டதற்காக பொலிஸார் தெரிவிக்கின்றனர் உண்மையில் புனர்வாழ்வு அளிக்கப்படாத சில பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களது கட்சியில் இருக்கின்றனர் சிலர் விடுதலைப் புலி இயக்கத்தில் இயங்கியவர்களும் இருக்கின்றனர் அவர்களுக்கு முதலாவது புனர்வாழ்வு அளியுங்கள் பிரதீபன் போன்ற ஒரு சாதாரண மனிதனை பிடித்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வது என்பது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்

கடந்த மாதங்களில் பொலிசாரின் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது முதலாவது நபர் வெலிகமை சேர்ந்த சுஜித் இந்திரஜித் என்பவர் இரண்டாவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த விதுஷன் சந்திரன் என்ற நபர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக பாணந்துறையில் அலிகான் என்ற ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் மூவருமே போலீசாரின் தாக்குதலில் தான் உயிரிழந்துள்ளனர் இது தொடர்பாக நிறைய பேச முடியும் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன் பொலிசாருக்கு உரித்தான அமைச்சரான சரத் வீரசேகர அமைச்சர் அவர்கள் ஒரு நீதியான விசாரணை நடத்த வேண்டும் காரணம் அவர்கள் அனைவரும் பொலிசாரினால் தான் மரணமடைந்துள்ளனர்.

சில நேரங்களில் அமைச்சர் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்ற கருத்துகளை பார்க்கின்றபோது கோமா நிலையில் இருந்தாரோ தெரியாது என்று ஒரு கேள்வி எழுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top