News

சீனாவை விஞ்சிய இலங்கை: மேலும் 82 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன, 2543 பேருக்கு கொரோனா தொற்று!

 

நாளுக்கு நாள் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மேலும் 82 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த கொவிட் மரணங்களின் அடிப்படையில் சீனாவை விஞ்சியுள்ளது இலங்கை.

குறித்த 82 கொவிட் மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,727ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்று தோன்றிய இடமாகக் கூறப்படும் சீனாவில் இதுவரையில் கொவிட் தொற்றினால் 4,636 பேர் உயிரிழந்துள்ளனர் என வேர்ல்டோமீற்றர் இணையதளம் குறிப்பிடுகிறது.

எனவே, நாட்டில் நேற்றுமுன்தினம் பதிவான 74 கொவிட் மரணங்களையடுத்து, மொத்த மரண எண்ணிக்கை 4,645 பதிவாகியது.

அதற்கமைய, மொத்த கொவிட் மரண எண்ணிக்கையில் சீனாவை இலங்கை விஞ்சியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கையில் மேலும் 823 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஓகஸ்ட்-04) முன்னதாக 1720 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னதாக மேலும் 823 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இன்று இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 2543 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 318,737 ஆக அதிகரித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top