News

இலங்கையில் இன்று 1509 பேருக்கு கொரோனா தொற்று, 93 பேர் உயிரிழப்பு

 

 

இலங்கையில் மேலும் 673 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சற்று முன்னதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (செப்-20) முன்னதாக 836 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் மேலும் 673 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இன்று இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 1509 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 506,000 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் மேலும் 93 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(19) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top