News

உத்தரபிரதேசம் வெள்ளத்தில் மிதக்கிறது: வீடுகள் இடிந்து விழுந்து 5 பேர் பலி

 

 

உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடாமல் அடைமழை பெய்து வருகிறது.

உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடாமல் அடைமழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மரங்கள் ஒடிந்து விழுந்து மின்துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஓடும் வெள்ளத்தால், வாகனங்கள் நெரிசலில் தத்தளித்தன. பல வாகனங்கள் சேதம் அடைந்தன. சில இடங்களில் தண்டவாளங்களும் நீரில் மூழ்கின.

உத்தரபிரதேசத்தின் 30 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரேபரேலி மற்றும் அமேதி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளும் 2 நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

பரபங்கி மாவட்டம் ரம்சனேகி கட் பகுதியில் கனமழைக்கு தாக்குப்பிடிக்காமல் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் இறந்தனர். இதேபோல சுஜன்புரா பகுதியில் ஒரு வீடு இடிந்ததில் 3 பேர் பலியானார்கள்.

ரேபரேலியில் அதிகபட்சமாக 18.63 செ.மீ. மழை பெய்துள்ளது. லக்னோவில் 10.72 செ.மீ., சுல்தான்பூர் 11.84 செ.மீ, அயோத்யா 10.46 செ.மீ. மழை பெய்துள்ளது. சட்டசபை வளாகம், அமைச்சர்களின் பங்களாக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதியில் பல அடி உயரத்திற்கு வெள்ளம் நிரம்பி நிற்கிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top