Canada

கனடா தேர்தல்; மூன்றாவது முறையாகவும் வென்று எம்.பியாகிறார்  ஹரி ஆனந்தசங்கரி!

தமிழ் கனேடியரான ஹரி ஆனந்தசங்கரி கனடா நாடாளுமன்றத் தோ்தலில் மூன்றாவது தடவையாகவும் வென்று கனேடிய பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

ரொரண்டோவின் – ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 26,341 வாக்குகளை பெற்று வெற்றியைப் பதிவு செய்தார்.

2011 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட லிபரல் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரி 34.8 சதவீத வாக்குளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் வேட்பாளர் 31.6 சதவீதம் வாக்குகளையும் என்.டி.பி. வேட்பாளர் 31 சதவீத வாக்குகளை பெற்றிருந்தனர். 2019 இரண்டாவது தோ்தலிலும் அவர் சிறப்பான வெற்றியை பதிவு செய்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தோ்தலில் அவர் மீண்டும் மூன்றாவது தடவையாக வென்று சாதித்துள்ளார்.

ஹரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான வி.ஆனந்தசங்கரியின் புதல்வராவார்.

ஹரி ஆனந்தசங்கரி மூன்றாவது முறையாகவும் கனடா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானமை புலம் பெயர் தமிழ் சமூகத்தினரிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்கள் தாம் வாழும் தேசங்களில் அரசியல் ரீதியில் நிலைநாட்டிவரும் சாதனைகளில் ஹரி ஆனந்தசங்கரியின் சாதனையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top